Friday, December 18, 2009

Kejayaan SJK(T) ST.THERESA'S CONVENT,TAIPING

Glitter Text
Make your own Glitter Graphics


Make your own Countdown Clocks

Sejarah Sekolah SJK(T)St.Theresa's Convent,Taiping


இக்கட்டடம் ரெவரன்ட் மாதர் சிஸ்டர் க்ளோடில்ட் என்பவராலும் பெரிஸ் பிரிஸ்ட் ஃபாதர்
ஒல்கோமொண்டி என்பவராலும் தொடங்கப்பட்டதாகும். 1958ஆம் ஆண்டு, சிஸ்டர் மேரி ஜோசப்
என்பவர் பள்ளியின் தலைமையாசிரியர் பொறுப்பை ஏற்றார். அப்பொழுது அவருடன் பதினொரு
ஆசிரியர்கள் பணி புரிந்தனர். 1964ஆம் ஆண்டு முதல் கல்லூரி ஆசிரியர்கள் பணி புரியத்
தொடங்கினர். 1971ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 268ஆக உயர்ந்தது.


1.6.1981ஆம் நாள் முதல், திருமதி. இராலாட்சி அவர்கள் தலைமையாசிரியர் பதவிப்
பொறுப்பினையேற்றார். அப்பொழுது மாணவர்களின் எண்ணிக்கை 163ஆகும். 1983ஆம் ஆண்டு, ஆண்
மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். 1989ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 428ஆக
உயர்ந்தது. வகுப்பறைகள் பற்றாக்குறையின் காரணமாகக் காலை மாலை என இரு பிரிவாகப் பள்ளி
நடத்தப்பட்டது.


1989ஆம் ஆண்டு பள்ளி தலைமையாசிரியர்; பெற்றோர் ஆசிரியர் சங்கம், ம.இ.கா. தைப்பிங்
தொகுதி தலைவர் திரு. வெ. இராமன் அவர்கள் உதவியுடன் ம.இ.கா. தேசியத் தலைவர்
மாண்புமிகு டத்தோஸ்ரீ ச. சாமிவேலு அவர்களைச் சென்று சந்தித்தனர். டத்தோஸ்ரீ
அவர்களளின் முயற்சியால், 1996ஆம் ஆண்டுத் தொடங்கப்பட்ட, பன்னிரண்டு வகுப்பறைகளைக்
கொண்ட புதிய கட்டடத்தின் கட்டுமானப் பணி 1998ஆம் ஆண்டு முடிவுற்றது. சுமார் ரி.ம
380 000.00 செலவில் இக்கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.


1998ஆம் ஆண்டு ஒரு வேளை பள்ளியாக மாறியது. 1999ஆம் ஆண்டு திருமதி பெ. புஷ்பராணி
அவர்கள் தலைமையாசிரியர் பதவியினையேற்றார். தற்போதைய மாணவர்களின் எண்ணிக்கை
770க்கும் மேலாகும். 2001ஆம் ஆண்டில் யு.பி.எஸ்.ஆர் தேர்வில் 1 மாணவர் 7A பெற்றார்.
2002ஆம் ஆண்டில் இரண்டு மாணவர்கள் 7A பெற்றனர்.